Tuesday, August 5, 2014

வந்தே மாதரம்

https://www.youtube.com/watch?v=vFxkXEUTbaI&feature=em-share_video_user

வந்தே மாதரம்!
சுஜலாம் சுபலாம்
மலயஜ சீதலாம்
ஷஸ்யஷியாமளாம்
மாதரம்
வந்தே மாதரம்

ஷுப்ரஜ்யோத்ஸன
புலகிதயாமினிம்
புல்லகுஸுமித த்ருமதல
ஷோபினிம்
சுஹாசினிம் சுமதுர
பாஷினிம்
சுகதாம் வரதாம்
மாதரம்
வந்தே மாதரம்

பாடலை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் முதலில் இவ்வாறு மொழிபெயர்த்தார்:

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!

பின்னர், பாடலுக்கு மேலும் சில சந்தங்கள் சேர்த்து, இரண்டாவது முறையாக மொழிபெயர்த்தார்:

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)

கப்பலோட்டிய தமிழன் படத்தில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்போம் பாடலைக்கேட்க இங்கே சொடுக்குங்கள்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?