Tuesday, February 25, 2014

பரம்பொருள் வாழ்த்து

ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே ;


கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே!
நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ!

Monday, February 17, 2014

BEST IN THE WORLD

Our nation is the best in the world
In knowledge, in wisdom – and
In prestige and in magnanimity – and 
In music that pervades everywhere - and
In poetry, our nation is the best nation.
In courage, in bravery – and 
In kindness, in hospitality – and 
In nutshelling the knowledge to all
Our nation is the best nation

In wealth, in hard industry – and
In strength, in nobility – and
In having courageous sea of men capable of safeguarding
Our nation is the best nation.

வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

வீர......................

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் 
வேறொன்று கொள்வாரோ?-என்றும் 
ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் 
அறிவைச் செலுத்துவாரோ? (வீர)


புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்எவறும் 
கொய்யென்று கண்டா ரேல்-அவர் 
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு 
இச்சையுற் றிருப்பாரோ? (வீர)


பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தா ரேல்-மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ? (வீர)


மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உயர்ந்தா ரேல்-அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுள தோ? (வீர)


விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வா ரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பா ரோ? (வீர)


மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ! (வீர)


வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவ ரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ? (வீர)

தண்ணீர்விட் டோவளர்த்தோம்?

தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக் 
கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ?

எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த 
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? 

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர் 
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? 

தர்மமே வெல்லுமெனும் சான்றோர் சொல் பொய்யாமோ? 
கர்ம விளைவுகள்யாம் கண்டதெலாம் போதாதோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்நது கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?

எந்தாய்!நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?

இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?

வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? எந்தை சுயா
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?

பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால்
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவே?

இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?

நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்,
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம்நீ நல்குதியே

Aran Glenn



Thursday, February 13, 2014

எங்கள் குமரி கன்னியாகுமரி.....

மூன்று கடல்...
குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் என
நான்கு திணை.....

தொல்காப்புகள் தொல்காப்பியன் தொழுத அதன் கோட்டு ஆசான்
தமிழ் அறம் வளர்த்த ஔவையார் அம்மை

ஆதி தமிழன் கடந்த பறுளி ஆறும், ஞான முனிகள் அமர்ந்த மருந்துவாழ் மலையும்

தமிழ் நிலத்தில் தொடங்கும் ஒரே நதியாம் மேற்கு தாமரபரணியும் நடந்த நிலம் எங்கள் நிலம்

எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....

அருள் நெறி நின்ற அன்புதுறவிகள் வந்த நிலமிது
உயிரின் சூட்சுமம் அறிந்த ஆசான்மார்கள் வாழ்ந்த நிலமிது

மலையும், அலையும், கடலும் வனமும் வயலும் வகைவகையாய் காய்கனிகளும்
வேரும் திணையும் தென்னை பனையும் அருவி குளமும் இசை பாடித்திரியும் பறவை இனங்களும்

திசை எங்கும் இனிமைகளாய் அழகான சிறிய உலகம்

எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....

தத்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்... தத்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்..
தித்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்... தித்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்..

பனைமரங்கள் கொண்டு நாவாய் கட்டி திரைகடல் ஓடி திரவியம் தேடி வாழ்க்கை நெய்தோம்
ஊர்கள் தோறும் பள்ளி சாலைகள் செய்து - அறிவு ஒளியால் அணி செய்தோம்
சாதி என்ற கொடுமையின் கொடுக்குடைத்தோம்...

தமிழ் எங்கள் தாய்...... தமிழ் நாடெங்கள் தாயகம்...
என்று முழங்கி உயிரீகங்கள் செய்து தமிழ் உலகு சேர்ந்தோம்....

எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....

எங்கள் குமரியில் திரும்பும் திசை எங்கும் இளந்தென்றல் காற்று உண்டு
தோண்டும் நிலமெங்கும் நல் ஊற்றுகள் உண்டு
சாதி மதம் என்று பிரிந்தாலும் எல்லோர் நெஞ்சிலும் நேசத்தின் ஈரம் உண்டு
அந்த நேசத்தை நம்பி கரம் கோர்த்து நின்று கனவொன்று வளர்க்கிறோம்

எங்கள் குமரி... இந்த உலகம் போற்ற எழுக....

என்று முழங்கிடும் எங்களின் சங்கமம்
குமரியின் சங்கமம் வரலாற்று சங்கமம்
கன்னியாகுமரியின் சங்கமம்

எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....

Monday, February 3, 2014

ஆண்டாள் அருளிய திருப்பாவை ....

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நான்கள் நம்பாவைக்கு சாற்றுநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

வங்க(க்) கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்க(ப்) பறை கொண்ட ஆற்றை அணி புதுவை(ப்)
பைங்கமல(த்) தண் தெரியல் பட்டார் பிரான் கோதை -
- சொன்ன
சங்க(த்) தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்து(ச்) செல்வ(த்) திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

சங்கம்4 ன் நிறைவு நாள் நிகழ்ச்சிகள்

சங்கம் - 4 ன் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் பெப்ருவரி 2 ம் தேதி நடைபெற்றன. மாலை 4 மணிக்குத் தொடங்கிய விவாத அமர்வில், தமிழத் தேசியம் குறித்து, தமிழ்த் தேசியப் போராளி தியாகு, ஊடகவியலாளர் லெனின், கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி,உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர். விவாதத்தைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு, நிறைவு நாள் நிகழ்ச்சிகளும், பேரமர்வும் தொடங்கியது. மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இந்த நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். காந்தளூர்ச் சாலை - குறித்து தொழில் அதிபர் ம.செந்தில் குமார் வரலாற்றுப் பூர்வமாக உரையாற்றினார். மாமன்னன் இராசேந்திர சோழன் - குறித்து பேராசிரியர் தெய்வநாயகம் உரையாற்றினார். தொடர்ந்து, சாதி, மதங்கள் அரசியலால் பிரிந்து தமிழ் மொழியெனும் அருளால் ஒன்றானோம் .- என்ற தலைப்பில் தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் இராஜேந்திரன் உரையாற்றினார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சிறப்புரை ஆற்றினார். போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களையும், இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களையும் மீள்குடியேற்றம் செய்யவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும். அதை அனைவரும் இணைந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக, ராசேந்திர சோழனின் நினைவாக செப்பேடு ஒன்றை மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் வெளியிட அதை மூத்த வழக்கறிஞர் காந்தி பெற்றுக்கொண்டார். கடந்த 24 ம் தேதியன்று தொடங்கி பெப்ருவரி 2 ம் தேதி வரை நடைபெற்ற 10 நாட்கள் நிகழ்ச்சிகளையும் நாம், தமிழ் மையம் அமைப்பினரோடு இணைந்து அருட் தந்தை ஜெகத் கஸ்பர் செய்திருந்தார்.

சங்கம்4 ன் 9 ம் திருவிழா

சங்கம் - 4 ன் 9 ம் திருவிழா பிப்ரவரி 1 ம் தேதியன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தின் ஆங்கில ஊடகங்கள் தமிழ்ப் பெருஞ்சமூகத்தை வெளிப்படுத்துகின்றனவா ? என்ற தலைப்பில், இளைஞர்களோடு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், இந்தியன் எக்ஸ்பிரஸின் துணை ஆசிரியர் பாபு ஜெயக்குமார், அந்தி மழை ஆசிரியர் அசோகன், சமூக ஆர்வலர் ஒளிவண்ணன், எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ், புதிய தரிசனம் பொறுப்பாசிரியர் செந்தில், ஊடகவியலாளர் ஜீவ சகாப்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவாதித்தனர். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு,நடைபெற்ற பேரமர்வில், கூட்டாட்சி சமூக நீதி  - தமிழ் அரசியலின் வறுமை குறித்து, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரவிசங்கரும், தமிழ்ப் பெருஞ்சமூகத்தை வெளிப்படுத்தும் ஆங்கில ஊடகங்களுக்கான அவசரத்தேவை குறித்து ம.ஜெகத் கஸ்பரும் விரிவாகப் பேசினார்கள். பால் புதுமையைர் குறித்து இதுவரை அறிந்திராத பல தகவல்களைக் கூறினார். கோபி சங்கர். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றுபவர்.  ஆண், பெண், திருநங்கைகளை மட்டுமே அறிந்திருந்தவர்களுக்கு இவை நீங்கலாக 20 க்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதாக அவர் கூறினார். நிகழ்வுகள் அனைத்தையும் நாம், தமிழ் மையம் அமைப்பினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Sunday, February 2, 2014

சங்கம் - 4 தமிழ்த் திருவிழாவின் 8 ம் திருவிழா

சங்கம் - 4 தமிழ்த் திருவிழாவின் 8 ம் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, சிறப்பு விருந்தினர்களின் விவாதம் ஒன்று நடைபெற்றது. தமிழ் வழிக் கல்வியின் உண்மை நிலை குறித்தும், உலகத்தரத்திற்கு தமிழ் வழிக்கல்வியை உயர்த்துவது சாத்தியமா என்பது குறித்தும், விவாதம் நடைபெற்றது. இதில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர் கல்யாணி, முனைவர் ராமசுப்ரமணியன் , திரு.செளரிராஜன் ஆகியோர் பங்குபெற்று விவாதித்தனர். இதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு,  நிர்வழிச் சாலை என்ற தலைப்பில் நதிகள் இணைப்பு குறித்து, பொறியாளர் காமராஜூம், கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான அனைத்துலக வாய்ப்புகள் குறித்து, நாடாளுமன்ற ஆய்வாளர் மனுசுந்தரமும் உரையாற்றினார்கள். தொடர்ந்து,கலி, கெழு, கொற்கை என்ற தலைப்பில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் உரையாற்றினார். நிகழ்வுகள் அனைத்தையும் விஜயன் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை நாம், தமிழ் மையம் அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். நாளையுடன் இந்த விழா நிறைவு பெறுகிறது.