Sunday, February 2, 2014

சங்கம் - 4 தமிழ்த் திருவிழாவின் 8 ம் திருவிழா

சங்கம் - 4 தமிழ்த் திருவிழாவின் 8 ம் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, சிறப்பு விருந்தினர்களின் விவாதம் ஒன்று நடைபெற்றது. தமிழ் வழிக் கல்வியின் உண்மை நிலை குறித்தும், உலகத்தரத்திற்கு தமிழ் வழிக்கல்வியை உயர்த்துவது சாத்தியமா என்பது குறித்தும், விவாதம் நடைபெற்றது. இதில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர் கல்யாணி, முனைவர் ராமசுப்ரமணியன் , திரு.செளரிராஜன் ஆகியோர் பங்குபெற்று விவாதித்தனர். இதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு,  நிர்வழிச் சாலை என்ற தலைப்பில் நதிகள் இணைப்பு குறித்து, பொறியாளர் காமராஜூம், கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான அனைத்துலக வாய்ப்புகள் குறித்து, நாடாளுமன்ற ஆய்வாளர் மனுசுந்தரமும் உரையாற்றினார்கள். தொடர்ந்து,கலி, கெழு, கொற்கை என்ற தலைப்பில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் உரையாற்றினார். நிகழ்வுகள் அனைத்தையும் விஜயன் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை நாம், தமிழ் மையம் அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். நாளையுடன் இந்த விழா நிறைவு பெறுகிறது. 

No comments:

Post a Comment