Monday, February 3, 2014

சங்கம்4 ன் 9 ம் திருவிழா

சங்கம் - 4 ன் 9 ம் திருவிழா பிப்ரவரி 1 ம் தேதியன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தின் ஆங்கில ஊடகங்கள் தமிழ்ப் பெருஞ்சமூகத்தை வெளிப்படுத்துகின்றனவா ? என்ற தலைப்பில், இளைஞர்களோடு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், இந்தியன் எக்ஸ்பிரஸின் துணை ஆசிரியர் பாபு ஜெயக்குமார், அந்தி மழை ஆசிரியர் அசோகன், சமூக ஆர்வலர் ஒளிவண்ணன், எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ், புதிய தரிசனம் பொறுப்பாசிரியர் செந்தில், ஊடகவியலாளர் ஜீவ சகாப்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவாதித்தனர். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு,நடைபெற்ற பேரமர்வில், கூட்டாட்சி சமூக நீதி  - தமிழ் அரசியலின் வறுமை குறித்து, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரவிசங்கரும், தமிழ்ப் பெருஞ்சமூகத்தை வெளிப்படுத்தும் ஆங்கில ஊடகங்களுக்கான அவசரத்தேவை குறித்து ம.ஜெகத் கஸ்பரும் விரிவாகப் பேசினார்கள். பால் புதுமையைர் குறித்து இதுவரை அறிந்திராத பல தகவல்களைக் கூறினார். கோபி சங்கர். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றுபவர்.  ஆண், பெண், திருநங்கைகளை மட்டுமே அறிந்திருந்தவர்களுக்கு இவை நீங்கலாக 20 க்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதாக அவர் கூறினார். நிகழ்வுகள் அனைத்தையும் நாம், தமிழ் மையம் அமைப்பினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment