சங்கம் - 4 தமிழ்த் திருவிழாவின் 7 ம் நாள் திருவிழா நேற்று மிகச் சிற்ப்பாகக் கொண்டாடப்பட்டது. மாலை 4 மணிக்குத் தொடங்கிய விழாவில், இன்றைய நம் கல்வி முறையும், நிறுவனங்களும் நவீன கூலிகளையே உருவாக்குகின்றன என்ற விமர்சனம் சரியா தவறா என்ற தளத்தில் விவாதம் நடைபெற்றது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களோடு இளைஞர்கள் கலந்துரையாடிய இந்த விவாத அமர்வுக்குப் பின், மாலை 6 மணிக்கு பேரமர்வு தொடங்கியது. வேரின்றிப் பூக்கும் வனம் : உறவேடு ( Facebook ) க்ரீச்சான் உலகங்களின் வனப்பும் எல்லைகளும் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இடையிலான உளவியல் கூறுகளைப் பற்றி சிறப்பானதொரு விவாதத்தைக் கொடுத்தார் மனநல மருத்துவர் ஷாலினி. தொடர்ந்து, இதயம் மறந்த கல்வி என்ற தலைப்பில், இன்றைய கல்வி முறை குறித்தும், பணிச்சுமை குறித்தும், மனிதவள நிபுணர் சுஜித் உரையாற்றினார்.
தினமும் மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொள்கின்றனர். நாளை மறுதினத்தோடு நிறைவு பெறும் இந்த நிகழ்வில், இன்று ( 31-01-2014) தமிழ் வழிக் கல்வியின் உண்மை நிலை, உலகத் தரத்திற்கு உயர்த்துவது சாத்தியமா என்பது தொடர்பாக, சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் விவாதமும், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் உள்ளிட்ட அறிஞர்களின் பேரமர்வும் இடம்பெற உள்ளது. தமிழ்த் தேன் பருக, அனைவரும் வருக.Thursday, January 30, 2014
தமிழ்த் தேன் பருக அனைவரும் வருக..
சங்கம் - 4 தமிழ்த் திருவிழாவின், 7 ம் நாள் நிகழ்வுகள், இன்று மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.சினாட் சென்டரில் தொடங்குகிறது. இன்றைய நம் கல்வி முறையும், நிறுவனங்களும், நவீன கூலிகளையே உருவாக்குகின்றன என்ற விமர்சனம் சரியா தவறா என்ற தலைப்பில் விவாத அமர்வுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் வளர்தொழில் ஜெயகிருஷ்ணன், தெழிலதிபர் செந்தில், பேராசிரியர் ஜோ அருண், பொருளியல் நிபுணர் நாகப்பன் புகேழந்தி, சூழல் அறிஞர் சுல்தான் இஸ்மாயில், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் பங்கு கொண்டு இளைஞர்களோடு விவாதிக்கின்றனர்.
மாலை 6 மணிக்குத் தொடங்கும், பேரமர்வில்,வேரின்றிப் பூக்கும் வனம் : உறவேடு, க்ரீச்சான் உலகங்களின் வனப்பும் எல்லைகளும் என்ற தலைப்பில் மருத்துவர் ஷாலினியும், இதயம் மறந்த கல்வி என்ற தலைப்பில் மனிதவள நிபுணர் சுஜித்தும், அயலுறவுக் கொள்கைகள் தகவமைப்பதில் மாநிலக் கட்சிகள், அரசுகள், மக்களுக்கு பங்கு உண்டா என்ற தலைப்பில் , மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி.சிவாவும் உரையாற்றுகின்றனர். தமிழ்த் தேன் பருக அனைவரும் வருக..சங்கம் - 4 தமிழ்ப் பெரும் திருவிழாவின் 6 ம் நாள்
சங்கம் - 4 தமிழ்ப் பெரும் திருவிழாவின் 6 ம் நாள் கொண்டாட்டங்கள் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றன. தொடக்க நிகழ்வாக இளைஞர்கள், சிறப்பு விருந்தினர்களை உள்ளடக்கிய விவாத அரங்கு நடைபெற்றது. பெருநகர் நாகரீகம் நீடித்து நிலைக்குமா, கிராம வாழ்க்கை கதையாடல் அதீத மிகைப்படுத்தலா, பெருநகரம் பெரிதா , கிராமம் பெரிதா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில், எழுத்தாளர் முருகேச பாண்டியன், வழக்கறிஞர் சுசீலா, மாற்று வாழ்க்கை மனிதர் இளங்கோ ரெங்கசாமி, நாம் அமைப்பைச் சேர்ந்த தாரை கு.திருஞானம் மற்றும், சூழலியலாளர் ரேவதி ஆகியோர் பங்கு கொண்டு இளைஞர்களோடு விவாதித்தனர்.
விவாதத்தைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு இயற்கை பேராசான் நம்மாழ்வாரின் திருவுருவப்படத் திறப்பு விழா நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பின்னர், " வடை போச்சே " - என்ற தலைப்பில் மருத்துவர் கு.சிவராமனின் உரை வீச்சு நடைபெற்றது. இதில் நம் வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும், உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார் திரு.சிவராமன். இவரைத் தொடர்ந்து, பட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான, கு.ஞானசம்பந்தன் அவர்கள், " அன்புடை நெஞ்சந்தாம் கலந்தனவே " என்ற தலைப்பில், சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற காதல், வீரம் குறித்து சான்றுகளோடு, நகைச்சுவையாக விளக்கினார். இவரைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், " நாங்கள் வெறுப்பின் கைதிகளில்லை, நம்பிக்கையோடே முன் செல்கிறோம் " என்கின்ற தலைப்பில் சாதி, மத பேதங்களால் ஏற்படுத்தப்படும் வெறுப்பு அரசியல் குறித்தும், உலகமயமாக்கல் குறித்தும் விரிவாகப் பேசினார். விவாதத்தில் தொடங்கி நிகழ்ச்சியின் இறுதி வரை அத்துனை நிகழ்ச்சிகளையும் திரு.விஜயன் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை நாம் அமைப்பினரும், தமிழ் மையம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் செய்திருந்தனர்.Wednesday, January 29, 2014
தமிழே தமிழே
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றெழும் எம் நிலம்
வாழ்க நிரந்தரம் ! வாழ்க தமிழ் மொழி !
தமிழே தமிழே தமிழே தமிழே ................
வாழ்க நிரந்தரம் ! வாழ்க தமிழ் மொழி !
தமிழே தமிழே தமிழே தமிழே ................
சங்கம் 4 - தமிழ்த் திருவிழா ஐந்தாம் நாள் நிகழ்வுகள்:
சங்கம் - 4 தமிழ்த் திருவிழாவின் இண்டாம் ஆண்டு கொண்டாட்டங்கள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. கடந்த 24 ம் தேதி தொடங்கிய இந்த விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் நேற்று மிக விமரிசையாக அரங்கேறின. தொடக்க நிகழ்வாக, கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற விவாத அரங்கு நடைபெற்றது. இதில் தமிழுணர்வு, பண்பாடு, மரபுகள், உணவு, இவற்றை இன்றைய இளைய தலைமுறையினர் வலிந்து சுமக்கத்தான் வேண்டுமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. சூழலியலாளர் ரேவதி, எழுத்தாளர் ராஜேந்திர சோழன், சூழலியலாளர் எங்கல்ஸ் ராஜா, திரைப்பட இயக்குனர் செந்தமிழன், அக்குபஞ்சர் விரிவுரையாளர் உமர் ஃபரூக் ஆகியோர் மாணக்கர்களோடு விவாதித்தனர்.
மாலை 6 மணிக்கு தமிழறிஞர்களின் பேரமர்வு தொடங்கியது. ஒரு விதையின் மரணம் என்ற தலைப்பில் ஓசை - சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் க.காளிதாஸ் சிறப்பானதொரு உரையாற்றினார். தொடர்ந்து, ஆழ்கடலும் ஆண்டு கடந்தோம் என்ற தளத்தில் ஒரிசா பாலு உரை நிகழ்த்தினார். அறிவியல் ஆதாரங்களோடு தமிழர்கள் கடல் கடந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சென்றுள்ளனர் என்பதை விளக்கினார். இவரைத் தொடர்ந்து, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, தமது பட்டிமன்றப் பயணம் குறித்தும், சாதி ,மதம் கடந்த என் மானுட தரிசனங்கள் என்ற தலைப்பிலும் சிரிக்கவும், சிந்திக்கவும் கூடிய சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்.
மாலை 6 மணிக்கு தமிழறிஞர்களின் பேரமர்வு தொடங்கியது. ஒரு விதையின் மரணம் என்ற தலைப்பில் ஓசை - சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் க.காளிதாஸ் சிறப்பானதொரு உரையாற்றினார். தொடர்ந்து, ஆழ்கடலும் ஆண்டு கடந்தோம் என்ற தளத்தில் ஒரிசா பாலு உரை நிகழ்த்தினார். அறிவியல் ஆதாரங்களோடு தமிழர்கள் கடல் கடந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சென்றுள்ளனர் என்பதை விளக்கினார். இவரைத் தொடர்ந்து, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, தமது பட்டிமன்றப் பயணம் குறித்தும், சாதி ,மதம் கடந்த என் மானுட தரிசனங்கள் என்ற தலைப்பிலும் சிரிக்கவும், சிந்திக்கவும் கூடிய சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்.
Tuesday, January 28, 2014
சங்கம் 4 - ன் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்
Aran Glenn
சங்கம் - 4 ன் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்
இன்று மாலை சரியாக 4 மணிக்குத் தொடங்குகின்றன. நிகழ்வின் தொடக்கமாக, தமிழுணர்வு, பண்பாடு, மரபுகள், உணவு, இவற்றை இன்றைய இளைய
தலைமுறையினர் வலிந்து சுமக்கத்தான் வேண்டுமா என்ற தளத்தில் விவாதம் நடைபெறுகிறது.
தொடர்ந்து, ஒரு விதையின் மரணம், ஆழ்கடலும் ஆண்டு கடந்தோம், பட்டிமன்றப் பயணம் - சாதி
மதம் கடந்த என் மானுடத் தரிசனங்கள் ஆகிய தலைப்புகளில் முறையே சூழலியலார் காளிதாஸ், கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா
ஆகியோர் உரையாற்றுகின்றனர். தமிழ்த் தேன் பருக அனைவரும் வருக..
சங்கம் 4 - தமிழ்த் திருவிழா நான்காம் நாள் நிகழ்வுகள்
தமிழ் மையம்
மற்றும் நாம் அமைப்பினர் இணைந்து சென்னையில் நடத்தி வரும் சங்கம் - 4 தமிழ்த் திருவிழாவின் 4 ம் நாள் நிகழ்வுகள் நேற்று சென்னையில் உள்ள
சி.எஸ்.ஐ.தலைமைச்செயலகத்தில் நடைபெற்றன. நிகழ்வின் தொடக்கமாக, கல்லூரி மாணவ, மாணவியர்கள்,
சிறப்பு
விருந்தினர்களுடன் நடத்திய விவாத மேடை அரங்கேறியது. சாதி, மதம், மொழி,
தேசம், மனிதம் எது நம் அடையாளம் என்ற தலைப்பில்
விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், சமூக ஆர்வலர் ஓவியா,
எழுத்தாளர்
மனுஷ்யபுத்திரன்,
எழுத்தாளர்
அ.முத்துகிருஷ்ணன்,
அருட்தந்தை.ஜெகத்
கஸ்பர் உள்ளிட்டோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இளைஞர்களோடு
விவாதித்தனர். விவாத அரங்கைத் தொடர்ந்து, மருத்துவத்தில் அரசியல் என்கின்ற தலைப்பில் அக்குபஞ்சர் விரிவுரையாளர் உமர்
பரூக்கின் சிறப்பானதொரு உரை நடைபெற்றது. தொடர்ந்து, பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள், மணி நீரே, மண்ணே,
மலையே, அலை கடலே, அணி நிழற் காடே என்ற தலைப்பில் இயற்கை குறித்து விரிவான உரையாற்றினார்.
இவரைத்தொடர்ந்து, மருத்துவர் மு.செம்மல் அவர்கள் திருவருட்பா
மூலம் அறிவியல் கற்போம் என்ற தளத்தில் உரை நிகழ்த்தினார்.
சங்கம் - 4 ன் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்
இன்று மாலை சரியாக 4 மணிக்குத் தொடங்குகின்றன. நிகழ்வின் தொடக்கமாக, தமிழுணர்வு, பண்பாடு, மரபுகள், உணவு, இவற்றை இன்றைய இளைய
தலைமுறையினர் வலிந்து சுமக்கத்தான் வேண்டுமா என்ற தளத்தில் விவாதம் நடைபெறுகிறது.
தொடர்ந்து, ஒரு விதையின் மரணம், ஆழ்கடலும் ஆண்டு கடந்தோம், பட்டிமன்றப் பயணம் - சாதி
மதம் கடந்த என் மானுடத் தரிசனங்கள் ஆகிய தலைப்புகளில் முறையே சூழலியலார் காளிதாஸ், கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா
ஆகியோர் உரையாற்றுகின்றனர். தமிழ்த் தேன் பருக அனைவரும் வருக..
சங்கம் 4 - தமிழ்த் திருவிழா மூன்றாம் நாள் நிகழ்வுகள்
சங்கம் 4 தமிழ்த் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று மிகச் சிறப்பாக நடந்தேறின. மாலை 4 மணிக்குத் தொடங்கிய விவாத அமர்வில் பாரம்பரிய நிலத்தின் பண்பாட்டு வேர்களிலிருந்து
சிறுபான்மைச் சமூகங்கள் விலகி அன்னியப் படுகின்றனவா ? என்ற பொருளின் கீழ் சிறப்பானதொரு
விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் , சமூக செயற்பாட்டாளர்கள்
ஆளூர் ஷாநவாஸ், வீரபாண்டியன், நக்கீரன் பத்திரிகையின்
துணை ஆசிரியர் கோ.வி.லெனின், எழுத்தாளர் மார்க் ஸ்டீபன், வழக்கறிஞர் வசந்த ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்விற்குப்
பின் மாலை சரியாக 6 மணிக்கு தமிழறிஞர்கள் பங்கு பெற்ற பேரமர்வு நடைபெற்றது. இதில் தனிநாயகம் அடிகளார் குறித்து மூத்த தமிழரிஞர் திரு.ஒளவை நடராசன் அவர்களும், பண்பாட்டு வேர்களில் இருந்து பிறக்கட்டும் புதுயுகத் தமிழினத்தின் விடுதலை விழுமியங்கள் என்ற தளத்தில், பேராசிரியர் க.நெடுஞ்செழியனும்
உரையாற்றினார்கள். உலகப் பரப்பில் தமிழ் என்ற தலைப்பில் கனடா வாழ் தமிழறிஞரான தங்கவேல் நக்கீரனார் அவர்கள் எழுதிய உரையை அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் வாசித்தார். இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் விழாவில் தொடக்க நிகழ்வாக கல்லூரி மாணவ, மாணவியரோடு சிறப்பு விருந்தினர்கள்
பங்குபெறும் விவாத அமர்வும், அதைத் தொடர்ந்து, நாட்டுப்புறவியலாளர்
திரு.முத்துக்குமாரசாமி , அக்குபஞ்சர் விரிவுரையாளர்
உமர் பரூக், பேராசிரியர் அப்துல் காதர் ஆகியோர் பல்வேறு தலைப்புக்களில்
உரையாற்ற இருக்கிறார்கள். தமிழ் குறித்தும், தமிழ்ச் சமூகம் குறித்தும் அறியப்படாத பல்வேறு தகவல்களை இந்நிகழ்வின் மூலம் பெறமுடிகிறது என்று விழாவில் பங்கேற்றவர்கள்
மகிழ்வுடன் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை நாம் அமைப்பினரும், தமிழ் மையம் அமைப்பினரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
சங்கம் 4 - தமிழ்த் திருவிழா முதல் நாள் நிகழ்வுகள்
தமிழின்
பெருமைகளைப் பேசும் விதமாக,
தமிழ்மையம்
அமைப்பின் துணையுடன் “நாம்” அமைப்பின் சார்பாக சங்கம்4-தமிழ்த் திருவிழாவின் இரண்டாம் ஆண்டு விழா
சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னையில் உள்ள தென்னிந்திய திருச்சபாயின் தலைமைச்
செயலகத்தில் நடைபெறும் இந்த விழா பிப்ரவரி -2ம் தேதியன்று நிறைவுபெறுகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் தமிழின்
பெருமை குறித்து உரையாற்றும் இந்த தமிழ்த் திருவிழாவின் தொடக்க நாளான நேற்று
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான
திருக்குறள் பேச்சுப் போட்டி நடை பெற்றது.
தொடர்ந்து "தீதின்றி வந்த பொருள்" - என்ற தலைப்பில், தமிழ்நாடு பனை இயக்கத்தின் தலைவர்
நல்லசாமியும்,
"தமிழ் வாழும்
அதிசயம்" - என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள்
திட்ட அலுவலர் பேராசிரியர் ராமசாமியும் உரையாற்றினார்கள்.
இவர்களைத்
தொடர்ந்து,
சென்னை உயர் நீதிமன்றத்தில்
நீதிபதி,
ராமசுப்ரமணியம்
அவர்கள், "திருக்குறள் ஏன்
தேசிய நூலாகவும், உலகின் பொது
அறப்பாரம்பரியமாக அறிவிக்கப்படத் தகுதிகளையுடையது என்ற தலைப்பில் பேசினார். .
முன்னதாக
பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு
நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை “நாம்” அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத்
கஸ்பார்,
பொறியாளர்
சதாசிவம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் நாளைய நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜீவ் மேனன், எழுத்தாளர் இமையம், மாலன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
Subscribe to:
Comments (Atom)