தமிழின்
பெருமைகளைப் பேசும் விதமாக,
தமிழ்மையம்
அமைப்பின் துணையுடன் “நாம்” அமைப்பின் சார்பாக சங்கம்4-தமிழ்த் திருவிழாவின் இரண்டாம் ஆண்டு விழா
சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னையில் உள்ள தென்னிந்திய திருச்சபாயின் தலைமைச்
செயலகத்தில் நடைபெறும் இந்த விழா பிப்ரவரி -2ம் தேதியன்று நிறைவுபெறுகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் தமிழின்
பெருமை குறித்து உரையாற்றும் இந்த தமிழ்த் திருவிழாவின் தொடக்க நாளான நேற்று
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான
திருக்குறள் பேச்சுப் போட்டி நடை பெற்றது.
தொடர்ந்து "தீதின்றி வந்த பொருள்" - என்ற தலைப்பில், தமிழ்நாடு பனை இயக்கத்தின் தலைவர்
நல்லசாமியும்,
"தமிழ் வாழும்
அதிசயம்" - என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள்
திட்ட அலுவலர் பேராசிரியர் ராமசாமியும் உரையாற்றினார்கள்.
இவர்களைத்
தொடர்ந்து,
சென்னை உயர் நீதிமன்றத்தில்
நீதிபதி,
ராமசுப்ரமணியம்
அவர்கள், "திருக்குறள் ஏன்
தேசிய நூலாகவும், உலகின் பொது
அறப்பாரம்பரியமாக அறிவிக்கப்படத் தகுதிகளையுடையது என்ற தலைப்பில் பேசினார். .
முன்னதாக
பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு
நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை “நாம்” அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத்
கஸ்பார்,
பொறியாளர்
சதாசிவம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் நாளைய நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜீவ் மேனன், எழுத்தாளர் இமையம், மாலன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
No comments:
Post a Comment